அப்பிப்பாளையம்: கரூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட அப்பிப்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி, பொன்னாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 9ல் நடக்கிறது. இக்கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு திருப்பணிக்கு தயார் நிலையில் உள்ளது. கும்பாபிஷேக திருவிழா இன்று இரவு கிராம சாந்தியுடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு நாளை, காலை ஆற்றில் இருந்து ஊர் பொதுமக்கள் சார்பில் தீர்த்தக்குடம் கொண்டு வருதல், வரும், 9ல் பொன்னாச்சி அம்மனுக்கும், மகா மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.