பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் தவன உற்சவம் இன்று இரவு நடைபெறுகிறது. புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை மற்றும் தனி அம்மன் சிலை, முதன் முதலில் புறப்பாடு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் ஏகாமபரநாதர் கோவிலில், ஏற்கனவே இருந்த பழைய உற்சவர் சிலை பழுதடைந்து விட்டதால், அதற்கு பதில், புதிய உற்சவர் சிலை செய்ய, அறநிலையத்துறை முடிவு செய்து, புதிய சிலை செய்யப்பட்டது. புதிய உற்சவர் சிலை செய்ய தடை விதிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் அனைத்து கோவில்களுக்கான சேவா சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய உற்சவர் சிலையை, உற்சவ புறப்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என, கடந்த ஜன., 24ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, புதிய உற்சவர் சிலை, இன்று இரவு நடக்கும் தவன உற்சவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு, சன்னிதி தெருவில் உள்ள, அரசு காத்தம்மன் கோவில் வரை சென்று திரும்பும்.மேலும் இம்மாதம், 30ம் தேதி பிரமோற்சவம் துவங்க இருக்கிறது. அதற்கான பந்தக்கால் இன்று காலை நடப்படுகிறது.