பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
நாமக்கல்: லட்சுமி குபேர ஷீரடி சாய்பாபா கோவிலில், நாளை (மார்ச் 9), கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல், சுவாமி நகர், மூன்றாவது தெரு, சத்குரு நகரில், லட்சுமி குபேர ஷீரடி சாய்பாபா கோவில், மிகுந்த பொருட்செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நாளை கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:30 மணிக்கு, லட்சுமி கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், காலை, 9:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வர புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல், இரவு, 9:30 மணிக்கு, பாபாவின் பளிங்கு சிலை பிரதிஷ்டை, அஷ்ட பந்த மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, புண் யாகம், நாடி சந்தானம், இரண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்; காலை, 8:00 மணிக்கு, கடம் புறப்பாடு, கோபுர விமானம் கும்பாபிஷேகம், காலை, 8:20 மணிக்கு, லட்சுமி குபேர ஷீரடி சாய்பாபா திருவுருவச் சிலைக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
* திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அடுத்த சின்னமணலியில், விநாயகர், மாரியம்மன், கூலகருப்பனார், புடவைக்காரி, பாட்டப்பன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபி?ஷகம் நடத்தும் பொருட்டு, நேற்று அதிகாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 7:30 மணிவரையில், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை (மார்ச் 9), 7:30மணிமுதல், 9:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.