பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
கரூர்: கரூரில், திருஷ்டி பொம்மைகள் விற்பனை ஜோராக நடக்கிறது. புதிய வர்த்தக நிறுவனங்கள், வீடுகளுக்கு திருஷ்டி கழித்தல் என்ற பெயரில் பொதுமக்கள், பல ஆயிரம் ரூபாயை தராளமாக செலவு செய்கின்றனர். வர்த்தக நகரான கரூரில், சமீப காலமாக திருஷ்டி பொம்மைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் டூவீலர்களில், திருஷ்டி பொம்மைகளை விதவிதமான வகையில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த திருஷ்டி பொம்மை வியாபாரி பழனி கூறுகையில், கடலில் கிடைக்கும் சங்குக்கு, ஒருவித காந்த சக்தி உள்ளது. அதேபோல் செம்பு தகடும், குறிப்பிட்ட பொருட்களை பார்ப் பவர்களின் மனதை திசை திருப்பும் தன்மை உடையது. இதனால், தயாரிக்கப்பட்ட திருஷ்டி பொம்மைகளை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தலா, ஒன்று வீதம், 100 முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம், என்றார்.