ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை பெற்ற தேசநாதேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், தர்மபுரி குமாரசாமி பேட்டையை சேர்ந்த சிவனடியார்கள் சிலர், மழை வேண்டி, நேற்று காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, திருவாசகம் முற்றோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.