பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடி பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
ஈரோட்டின் புகழ்பெற்ற, கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா பிப்., 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 27ல் கொடியேற்றம், மார்ச், 5ல் பாலாபி ேஷகம், 6ல் அக்னி கபால ஊர்வலம், 7ம் தேதி இரவு குண்டம் பற்ற வைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, குண்டம் இறங்கும் விழா துவங்கியது. பூசாரி பிரகாஷ், கரகத்துடன் முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, 7,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.பெண்கள் சிலர், கையில் குழந்தையுடன் குண்டம் இறங்கினர். அப்போது, சுற்றியிருந்த பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என, விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டனர். இதையடுத்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலையில், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.