பதிவு செய்த நாள்
09
மார்
2017
12:03
ஆர்.கே.பேட்டை: சுப்ரமணிய சுவாமி கோவிலின், 25ம் ஆண்டு பிரம்மோற்சவத்தில், நேற்று, உற்சவர் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்; திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நேற்று, தேர் திருவிழா நடந்தது. 25ம் ஆண்டாக நேற்று நடந்த விழாவில், காலை, 11:00 மணிக்கு, தேர் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். உப்பு, மிளகு கலவையை தேர் மீது துாவி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மதியம், 12:00 மணிக்கு, அறம்நெறி சங்கம் தெருவில், தேர் நிலை கொண்டது. மீண்டும், மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, நடு பஜார், செல்வவிநாயகர் கோவில் வழியாக, மாலை, 6-:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது.