ராஜபாளையம் : கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு ராஜபாளையத்தில் இரண்டு இடங்களில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்க உள்ளன. சஷ்டி விரதம் ஐந்து நாள்களுக்கு முன் துவங்கியது. விரதம் இருக்கும் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்த்துவிட்டு விரதத்தை முடிப்பர். இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி மாயூரநாத சுவாமி கோயிலில் மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் குருநாதன், நிர்வாக அதிகாரி வேல்முருகன் செய்து உள்ளனர். சஞ்சீவி மலை அருகே உள்ள மலைமுந்தல் விநாயகர் கோயில் சார்பில் சூரசம்ஹார நிகழ்ச்சி, பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இந்நிகழ்ச்சியை பார்க்க ராஜபாளையத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கண்ணன் டி.எஸ்.பி., தலைமையில் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.