தேவகோட்டை : தேவகோட்டை நகரசிவன் கோயில் பாலதண்டாயுதபாணி சன்னதியில் கந்த சஷ்டி விழா நடந்தது. விழா தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். சிறுவர்கள் ராம்நாத், அதித்திமுத்து, லட்சுமி பேசினர். கடல் கடந்து நகரத்தார் ஆற்றிய பணி தலைப்பில் குமரப்பன், குரு சீடராகிறார் தலைப்பில் நாகைமுகுந்தன் சொற்பொழிவாற்றினர். காலத்தை வென்ற கண்ணதாசன் தலைப்பில் பழ.கருப்பையா எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். மதுரை டால்பின் பள்ளி மாணவர்கள் அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.