பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
சென்னிமலை: சென்னிமலை கருப்பணசாமி கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. சென்னிமலை, பெரியார் நகரில் உள்ள கருப்பணசாமி கோவிலில், கடந்த, 3ல், பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் பவானி கூடுதுறையிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்தனர். அன்றிரவு, 8:00 மணிக்கு, கருப்பணசாமிக்கு தீர்த்த அபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:00 மணிக்கு திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு, 1:00 மணிக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு, கருப்பணசாமியை வழிபட்டனர். நேற்று மறு பூஜையுடன் பொங்கல் விழா நிறைவடைந்தது.