பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
பந்தலுார் : பந்தலுார் ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவில், கும்பாபி ேஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் கரோலைன் எஸ்டேட், ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில், கும்பாபி ேஷக விழா நடந்தது. 6ம்தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 9:00மணிக்கு எஸ்டேட் முதுநிலை பொது மேலாளர் முரளி, உதவி மேலாளர் அமித்பொன்னன்னா ஆகியோர் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 7ம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகளும், இரவு, 8:30மணிக்கு விமான கலச ஸ்தாபிதம், விக்ரகங்களுக்கு எள்வகை மருந்து சாற்றுதல், யந்திரஸ்தாபனம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. 8ம்தேதி காலை கணபதி வழிபாடு, யாகசால பூஜைகள் நடந்தது. 10:00 மணிக்கு குருக்கள் கனநாதன் தலைமையில், மகா கும்பாபிேஷம் நடத்தப்பட்டு,புனித நீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கள அதிகாரி சஜீத்குமார். கோவில் கமிட்டியினர், எஸ்டேட் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றன