பதிவு செய்த நாள்
09
மார்
2017
01:03
திருமால்பூர்: மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவம், 1ம் தேதி துவங்கியது. காலை, இரவு நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா வந்தார். பிரம்மோற்சவத்தின், எட்டாவது நாளான நேற்று, தேரில் மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார். பக்தர்கள் காலை, 9:00 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னிதி தெரு உள்ளிட்ட பல தெருக்களில் வீதியுலா வந்தார். தேர் செல்வதற்கு சவுகரியமாக, வீட்டு மின் இணைப்பு ஒயர்களை, மின் வாரியம் அகற்றியது. தேர் சென்றவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டது.