பதிவு செய்த நாள்
10
மார்
2017
12:03
குமாரபாளையம்: கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் மறுபூஜை திருவிழா நடந்தது. குமாரபாளையம் அடுத்த, கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா, கடந்த, பிப்., 14ல் துவங்கியது. இதை முன்னிட்டு அம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பிப்., 28ல் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. கடந்த, 1 காலை, 6:00 மணியளவில் பூமிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று, மாரியம்மன், காளியம்மன் கோவிலில் மறுபூஜை விழா நடந்தது. அம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.