கொடுமுடி : பழைய சோளக்காளிபாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கொடுமுடி அருகே, சென்னசமுத்திரம் கிராமம், பழைய சோளக்காளிபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனையுடன், முதற்கால யாக பூஜையுடன், விழா துவங்கியது. நேற்று காலை, 3:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.