சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இஸ்கான் சார்பில், நாளை பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அவதார திருநாள் கொண்டாடப்பட உள்ளது. சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலில், நாளை நடக்கும் விழாவில் மாலை, 6:00 மணிக்கு பஜனை, 7:00 மணிக்கு அபி?ஷகம் நடக்கிறது. மாலை, 7:30 மணிக்கு ஸ்ரீ சைதன்ய லீலா என்னும் தலைப்பில் உபன்யாசம் நடைபெற உள்ளது. விழாவில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மூத்த சன்னியாசிகளில் ஒருவரான, லண்டனை சேர்ந்த பக்தி விகாஸ சுவாமி சொற்பொழிவாற்ற உள்ளார். பொதுமக்கள் பங்கேற்று, பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் கருணையை பெறுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுள்ளது.