பதிவு செய்த நாள்
14
மார்
2017
12:03
கரூர்: தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்றிரவு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. கரூர் அடுத்த, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 1ல் வெள்ளி கருட சேவை, 3ல் கொடியேற்றம், 9ல் திருக்கல்யாணம், 11ல் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்றிரவு, கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. மின்னொளி ஜொலிக்க அமைக்கப்பட்டிருந்த தெப்பப் தேரில், நம் பெருமாள் வந்து, தெப்பத்தை ஐந்து முறை சுற்றிவந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். அப்போது, வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து, மங்கள இசை வாசிக்கப்பட்டது, குளத்தை ஐந்து முறை சுற்றி வந்த பின், நம்பெருமாளை மூலஸ்தானத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். வரும், 18ல் ஆளும் பல்லாக்கும், 20ல் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.