பதிவு செய்த நாள்
18
மார்
2017
12:03
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நாளை இரண்டாம் முறையாக பூச்சாட்டு விழா நடக்கிறது. ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கடந்த வாரம், பூச்சாட்டு விழா கோலாகலமாக நடந்தது. தற்போது, இரண்டாம் முறையாக, புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள், நாளை காலை, 10:00 மணிக்கு மேல், மாரியம்மனுக்கு தங்கள் பகுதியிலிருந்து பூக்களை எடுத்துக்கொண்டு, தும்பல் பிரதான சாலை வழியாக, ஊர்வலம் வந்து, அம்மனுக்கு வைத்து சிறப்பு செய்கின்றனர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது.