பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
திருவள்ளூர் : பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (21ம் தேதி) மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூலநட்சத்திரத்தன்று, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூல மந்திர ஹோமம் நடத்தப்படுகிறது. அன்று ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவித்து, ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை (21ம் தேதி) மூல நட்சத்திரத்தன்று, காலை 9:00 மணிக்கு, ஹோமம் துவங்கி, காலை, 11:30 மணிக்கு நிறைவடைகிறது. பகல், 12:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.