பதிவு செய்த நாள்
22
மார்
2017
12:03
கோயில்களில் திகழும் பெருமாளின் சயனக் கோலங்கள் எட்டு வகையாகும். அவை: உத்யோக சயனம், மாணிக்க சயனம், தவ சயனம், தர்ப்ப சயனம், போக சயனம், வீர சயனம், வடபத்ர சயனம், புஜங்க சயனம், இந்தக் கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கும் தலங்கள் என்னென்ன?
உத்யோக சயனம்: குடந்தை சார்ங்கபாணி திருக்கோயில்
மாணிக்க சயனம்: திருநீர்மலை
தவ சயனம்: திருக்கடல் மல்லை
தர்ப்ப சயனம்; திருப்புல்லாணி
போக சயனம்: தில்லை சித்ரகூடம்
வீர சயனம்: திருவழுந்தூர் (மயிலாடுதுறை)
வடபத்ர சயனம்: திருவில்லிப்புத்தூர் (வடபத்ரசாயி கோயில்)
புஜங்க சயனம்:
திருவரங்கம், அன்பில், ஆதனூர், திருவள்ளூர், உத்தமர் கோயில், கபிஸ்தலம், திருக்கோட்டியூர், திருக்கோளூர், திருச்சிறுபுலியூர், திருப்புள்ளம்பூதங்குடி, திருவிதாங்கூர், வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருப்பேர்நகர் (கோயிலடி) திருவெற்றிக்குடி, திருவெஃகா முதலான தலங்களில்.