தேவகோட்டை: சருகணியில் திருஇருதயம் ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பாதிரியாராக லெவே பணியாற்றினார். இவருடைய நினைவு நாளை திருவிழாவாக கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். அவர் பணியை கவுரவிக்கும் வகையில் புனிதர் பட்டத்திற்காக அவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாண்டு திருவிழா பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது. பிஷப் தலைமையில் பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து லெவே பாதிரியார் சப்பர பவனி, விருந்து நடந்தது.