துர்க்கை கோவில் திருவிழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2017 12:03
கிருஷ்ணராயபுரம்: செக்கணம் துர்க்கையம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமியை வழிபாடு செய்தனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர் அடுத்த செக்கணம் கிராமத்தில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று திருக்காம்புலியூர் பகுதியில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி, மேட்டு திருக்காம்புலியூர் வழியாக ஊர்வலமாக வந்து, செக்கணம் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, துர்க்கை அம்மனுக்கு பல்வேறு அபி?ஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.