Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி ... கிருஷ்ண நாமம் உச்சரியுங்கள்: இஸ்கான் குரு ஜெயபதாக சுவாமி மகாராஜ் கிருஷ்ண நாமம் உச்சரியுங்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுளை வழிபடுவது எப்படி? : பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை
எழுத்தின் அளவு:
கடவுளை வழிபடுவது எப்படி? : பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை

பதிவு செய்த நாள்

27 மார்
2017
10:03

மதுரை: பூஜையின் போது, உடலை மட்டும் அமர்த்திக் கொண்டு, மனதை வேறு இடத்தில் வைத்து கடவுளை வணங்கக் கூடாது, என, சிருங்கேரி சாரதா பீடம் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை வழங்கினார். மதுரை, கொடிமங்கலம் சீதாலட்சுமி அம்மன் கோவிலுக்கு, நேற்று வந்த, பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி ஆகியோர், பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பாரதீ தீர்த்த சுவாமி பேசியதாவது: ஆதிசங்கரர் வழியில், வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும். அவரைப் போல் கடவுளை தியானிக்கவும், வணங்கவும் வேண்டும். அவர், கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் போது, சிவனிடம் இல்லாத ஒரு பொருளை வழங்க விரும்பினார். மனம் மட்டும் தான், சிவனிடம் இல்லாத பொருள்; அதையே அவர் சமர்ப்பித்தார். பூஜையின் போது கடவுளுக்கு சமர்ப்பிக்கும் பூக்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நாம் எந்த அளவு, ஈடுபாட்டுடன் வணங்குகிறோம் என்பதே முக்கியம். முழு மனதுடன், 10 நிமிடங்கள் கடவுளை வணங்கினாலும் போதுமானது. இவ்வாறு அவர் பேசினார். பின், விதுசேகர பாரதீ சுவாமி உபன்யாசம் செய்தார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் கிரிஜா சங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.சுவாமிகள் இருவரும் நாளை காலை, 10:00 மணிக்கு, பொதுமக்களுக்கு தரிசனம் தருகின்றனர். மாலை, 4:00க்கு புறப்பட்டு, 6:00 மணிக்கு பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பூரண கும்ப வரவேற்பு பெறுகின்றனர். இரவு, 8:30 மணிக்கு, சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar