Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஏப்.,7 முதல் வி.ஐ.பி., ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம்!

பதிவு செய்த நாள்

29 மார்
2017
10:03

காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் ருத்ராட்சம் வைத்து பூஜிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலமாகும். கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. இதில், ஏதாவது ஒரு பொருள் வைத்து, பூஜிக்கப்படுவது வழக்கம். பக்தர் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, என்ன பொருள் வைப்பது என உத்தரவிடுவார். கோவிலுக்கு செல்லும் பக்தர், பொருள் குறித்து கூறுவார். சுவாமியிடம் பூ வாக்கு கேட்டபின், உத்தரவு பெட்டியில் அந்த பொருள் வைக்கப்படும்.

இந்தப் பொருள், நடக்க இருப்பதை முன் கூட்டியே குறிப்பாக உணர்த்துவதாக அமைவது சிறப்பு. கடைசியாக, பிப்.,22 முதல் மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,சென்னையைச் சேர்ந்த, சங்கர் சுப்பிரமணியம் என்பவர் கனவில், கிடைத்த உத்தரவையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல், ஒரு முகம் உடைய, 108 ருத்ராட்சம், வில்வ இலை நீலநிற துணிப்பையில் வைத்து பூஜிக்கப்படுகிறது. இதுகுறித்து, கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிவனுக்குரிய ருத்ராட்சம், வில்வ இலை வைக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சம் ஆன்மிகத்தின் அடையாளம். வரும் காலத்தில் ஆன்மிகத் தேடலில் ஏராளமானோர் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மெய் சிலிர்த்தேன்:
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த, எஸ்.சங்கர் சுப்பிரமணியம் கூறியதாவது: கடந்த, 26ல் என் கனவில் முருகர் தோன்றினார். திருநீறில் வைத்து ஒருமுகம் உடைய, 108 ருத்ராட்சம், ஒரு வில்வ இலையை, என் சன்னிதியில் உள்ள பெட்டியில் வை என்று கூறினார். இதுகுறித்து சென்னை, நவாஸ்பேட்டையில் சிவன் கோவில் சிவாச்சாரியார் ஒருவரிடம் கேட்டேன். இதைக்கேட்ட அவர், இங்கு சிவன்கோவில் உழவார பணி நடக்கிறது. பழமையான ருத்ராட்ச மாலை உள்ளது என்றார். ஒரு பையில் இருந்த ருத்ராட்சமாலையை கொடுத்தார். அதில் மிகச்சரியாக, 108 ருத்ராட்சம், அதுவும் ஒருமுகம் உடையதாக இருந்தது. பக்தி பரவசத்தில் மெய் சிலிர்த்து போனேன். அதைத்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க தந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar