மாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2017 01:03
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாடார் உறவின்முறை காரியாலயத்திலிருந்து கொடி, மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் பின் கொடி ஏற்றப்பட்டது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் எட்டாம் நாள் பொங்கல் பண்டிகை நடைபெறுகிறது. அன்று கோயில் முன்பு பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவர். முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் பக்தர்கள் பூக்குழி இறங்கும் பூக்குழி விழா நடக்கிறது. 51,101 சட்டிகள் ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவர். தினமும் இரவு 7:00 மணிக்கு கோயில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.