பதிவு செய்த நாள்
30
மார்
2017
01:03
அவிநாசி : அவிநாசி அருகே மொண்டிபாளையத்தில், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள உண்டியல்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் சந்திர மோகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டன. மூன்று லட்சத்து, 69 ஆயிரத்து, 713 ரூபாய், பக்தர்களால், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதில், செல்லாத நோட்டு, 15,500 ரூபாய் இருந்தது. இத்தொகை, ரிசர்வ் வங்கியில் செலுத்தி, கோவில் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.