பதிவு செய்த நாள்
31
மார்
2017
02:03
திருக்கழுக்குன்றம்;திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், சித்திரை பெருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு, ஏப்., 30ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது; மே 10ம் தேதி முடிவடைகிறது. விழாவிற்கான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில், செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தின் படி நிகழ்ச்சி நடக்க வேண்டும்; கடந்தாண்டு சுவாமிக்கு நகை சார்த்தப்படவில்லை. இந்தாண்டு கண்டிப்பாக நகை சார்த்த வேண்டும்; சுவாமி முதலில், தீர்த்தவாரிக்கு சென்று, பின் மாட வீதி வரவேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.