பதிவு செய்த நாள்
31
மார்
2017
03:03
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், அக்னிமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வழிபட்டனர். பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற அக்னிமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், சந்தைபேட்டை ஆற்றுப்பகுதியில் இருந்து, அலகு குத்தி ஒட்டமெத்தை, ஆர்.எஸ்.,சாலை, பஸ் நிலையம், காந்திபுரம் ஆகிய வீதிகள் வழியாக, கோவிலை வந்தடைந்தனர்.