பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
12:04
எலச்சிபாளையம்: பெரியமணலி, கரியகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த, பெரியமணலி கரியகாளியம்மன் கோவிலில், மார்ச், 14ல், மாரியம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. 21ல், கரியகாளியம்மனுக்கு பூச்சாட்டல் நடந்தது. 24ல் கிராம சாந்தி, 25ல் கொடியேற்றம், 28ல், சக்தி அழைத்தல், 29 காலை, 9:00மணிக்கு, சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. அன்று மாலை, 5:00 மணிக்கு கரியகாளியம்மன் தேர் இழுக்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் விழா முடிந்தது.