குன்னுார்;குன்னுார் எடப்பள்ளியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நாளை ராமநவமி பூஜை துவங்குகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவில்கள் உட்பட பெரும்பாலான கோவில்களில் வரும், 5ம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் எடப்பள்ளி சித்தகிரி ஷீரடி சாய்பாபா கோவிலில், நாளை மாலையில் ஷீரடி சாய்பாபா மற்றும் ராமர் உட்பட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.தொடர்ந்து, 5ம் தேதி காலை,9:00 மணிக்கு கோவிலில் புறப்படும் ஊர்வலம், பெட்டட்டி சுங்கம், இளித்தொரை, எடப்பள்ளி வண்டிச்சோலை வழியாக மீண்டும் எடப்பள்ளி கோவிலை அடைகிறது. இதில், அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு விபூதி உட்பட பிரசாத வினியோகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயலாளர் நந்தீஸ்வரா ஆனந்தா, மாதா சக்திமா மற்றும் சாய்பாபா பக்தர்கள் செய்து வருகின்றனர்.