ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2017 12:04
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இக்கோயிலில் வைகாசிதோறும் 17 நாட்கள் திருவிழா நடக்கும். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அறிவதற்காக கோயில் முன் கொடியேற்று விழா நடக்கும். இவ்விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. பூஜாரி கணேசன் கொடியுடன் ரத வீதியில் சுற்றி வந்தார். உபயதாரர் சார்பில் அம்மனுக்கு திருமஞ்சனம் சாற்றுதல் நடந்தது. பின் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, கணக்கர் பூபதி செய்து இருந்தனர்.