பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
12:04
திருப்பூர்: திருப்பூர், லட்சுமி நகர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில் நேற்று, பால் குட ஊர்வலம் நடந்தது. லட்சுமி நகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, நேற்று முன்தினம், குலாலர் கல்யா மண்டபத்தில் இருந்து, சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, நூற்றுக்கக்கான பெண்கள் பங்கேற்ற, பால் குட ஊர்வலம் நடந்தது. பல்வேறு வேடம் அ?ந்து பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இரவு, அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.பூச்சாட்டு விழாவில், இன்று காலை, 6:00 மிக்கு மாவிளக்கு ஊர்வலம்; இன்று மாலை, பூவோடு எடுத்தல், சவுண்டம்மன் கோவிலிருந்து, பட்டு வஸ்திரம் கொண்டு வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாளை, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டும்; வரும், 7ல், அன்னதானமும் நடைபெறவுள்ளது.