காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று, நாயன்மார்களுக்கு பெருமை சேர்க்கும் அறுபத்து மூவர் உற்சவத்துடன் வெகு விமரிசை யாக நடை பெற்றது. ஏகாம்பரநாதர்– ஏலவார்குழலி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முன்செல்ல, நாயன்மார்கள் பின் தொடர்ந்து சென்றனர். இந்த காட்சியை, ஏராளமான பக்தர்கள் நான்கு ராஜ வீதிகளிலும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.