பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
12:04
திருவள்ளூர்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, பெரியகுப்பம், சீனிவாச பெருமாள் கோவிலில், அவரது உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.ராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. அன்று காலை, ராமானுஜர் மூலவர், உற்சவர், கரிக்கோலம் நடந்தது. தொடர்ந்து ஹோமம் துவங்கி,பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ராமானுஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில், பெருமாள், ராமானுஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.