ஊட்டியில் மகாவீர் ஜெயந்தி விழா நலிந்தோருக்கு நல உதவிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2017 02:04
ஊட்டி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு, உல்லன் கம்பளிகள் வழங்கப்பட்டன. ஊட்டி, ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களின் அமைப்பான அரியன்ந் மஞ்ச் என்னும் சேவை அமைப்பு, ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வருகிறது. ஊட்டி அருகே, மசினகுடி கோசாலையில் உள்ள பசுக்களுக்கு மாதந்தோறும், குறைந்தபட்சம், 500 கிலோ அளவுக்கு தீவனங்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு, 100, உல்லன் கம்பளி வழங்கப்பட்டது. மேலும், பல ஏழை மக்களுக்கு, உணவு பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அரியன்ந் மஞ்ச் அமைப்பின் தலைவர் பூனம் கோத்தாரி தலைமை வகித்தார். செயலாளர் நவீன்ஜபகா, பொருளாளர் சஞ்சய் போத்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.