பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
01:04
திருப்பூர்;திருப்பூர் பல்லடம் ரோடு, மாநகராட்சி காலனியில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழாவையொட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
இம்மாதம், 4ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், இவ்விழா துவங்கியது. 11ம் தேதி, இரவு அம்மனுக்கு பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. 12ல், முப்போடு, பூ மிதித்தல் மற்றும் புனித தீர்த்தகுடம் எடுத்தும் வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. கோவில் வளாகத்தில், ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.தொடர்ந்து, அலகு குத்தி வருதல், அம்மன்
அழைத்தல் மற்றும் இரவு, 8:00 மணிக்கு பொங்கல் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். நற்று, நொய்யல் நதியில் இருந்து, அம்மனுக்கு வாண வேடிக்கையுடன் அக்னி கரகம் எடுத்து வரப்படுகிறது. இன்று, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.