திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2017 01:04
திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று மாலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருள்பாலித்தார்.