புதுச்சேரி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2017 01:04
புதுச்சேரி: தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பொதுமக்கள் தரிச னம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மணக்குள விநாயகர் கோவி லில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களி லும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, படகு குழாம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.