பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
ஆர்.கே.பேட்டை : சித்திரை பிரம்மோற்சவத்தில், நேற்று முன்தினம், காலை சூரிய பிரபையில் எழுந்தருளிய சந்தான வேணுகோபால சுவாமி, மாலையில் சந்திர பிரபையில் உலா வந்தார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தான வேணுகோபால சுவாமி கோவில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, அம்ச வாகனத்தில் சுவாமி உலா வந்தார். மறுநாள், சிம்ம வாகனத்திலும், வெள்ளிக்கிழமை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளிய சுவாமி, நேற்று முன்தினம், காலையில், சூரிய பிரபையில் உலா வந்தார். மாலையில், சந்திர பிரபையில் எழுந்தருளினார். நேற்று காலை, தேர் திருவிழாவும், மாலையில் குதிரை வாகன பவனியும் நடந்தது. இன்று காலை, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, எஸ்.வி.ஜி.புரம், எஸ்.பி.கண்டிகை, சமத்துவபுரம், ஆர்.கே.பேட்டை, வங்கனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தினசரி கோவிலுக்கு வந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.