பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
ஆத்தூர்: பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரையில் உள்ள கைலாசநாதர் கோவில் வளாகத்தில், நேற்று, தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிராதேவி அம்மனுக்கு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர், சேலம், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர், சுவாமியை வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.