பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
மதுரை: சம்பாதித்த பணத்தை தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் தராமல் வைத்திருந்தால் வீணாகிவிடும். அதை தர்மம் செய்து சந்தோஷத்தை பெருக்க வேண்டும், என வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.
சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஆசார்ய தேவோ பவ தலைப்பில் நடந்த உபன்யாசத்தில் அவர் பேசியதாவது: இறைவன் நம் அறிவை மதிக்கிறார். அறிவே இல்லாதவன் போல நடத்த வேண்டும் என்று நினைத்தால் கூட நடத்தமாட்டார். ஏனென்றால், இறைவன் மனிதனை, மனிதனாகத்தான் நடத்துவார். அவர் நமது எந்த செயலையும் தடுக்கமாட்டார். அவர் கொடுத்த ஞானத்தை வைத்து நாம் முன்னேற வேண்டும். ஞானம் என்ற ஓடத்தில் ஏறி சம்சார கடலை கடக்க வேண்டும். நமக்கு துன்பங்கள் வரும் போது வேதம், கீதை மூலம் இறைவன் உதவி செய்கிறார். நாம் தவறு செய்தால் தடியால் திருத்தமாட்டார்; ஞானத்தால் தான் திருத்துவார். நம்மிடம் இருக்கும் பணத்தில் ஆறில் ஒரு பங்கு தர்ம காரியங்களுக்காக செலவிட வேண்டும். முன்பெல்லாம் வீடுகளில் கிணறு இருக்கும், நீர் இறைக்க, இறைக்க ஊறும். அதைப்போல பணத்தை, நல்ல வழியில் செலவு செய்தால்தான் பெருகும், என்றார்.