Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னசேலத்தில் குரு பூஜை விழா மூணாறு அருகே பூக்குழி இறங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரபுரநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா முகூர்த்தகால் நடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
11:04

உத்தமசோழபுரம்: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழாவையொட்டி, நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. உத்தமசோழபுரம், பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலின் முக்கிய திருவிழாவான, சித்திரை தேரோட்ட விழாவுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி தலைமையில் நேற்று நடந்தது. மே, 8 காலை சித்திரை தேரோட்டத்துக்கான கொடியேற்றம் நடக்கிறது. 9ல், கரபுரநாதர் பிச்சாண்டார் திருக்கோலத்தில் காட்சியளிப்பார். மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் மே, 10 மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. 11ல், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 12 மாலை ஊஞ்சல் உற்சவம், 13ல் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் தேரோட்ட விழா நிறைவு பெறும். நேற்று ஹேவிளம்பி ஆண்டின், முதல் பிரதோசம் சிவனுக்கு உகந்த திங்கள் கிழமையாக வந்துள்ளது. இதையொட்டி, நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பெரியநாயகி சமேத கரபுரநாதர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar