Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனை மனம் உருக வேண்டினால் ... கோபம் தணிக்கும் தண்ணீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை செய்...நல்லவனாக இரு.. சொல்கிறார் சாய்பாபா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
02:04

*நல்லதை செய். நல்லதை பார். நல்லவனாக இரு. இதுவே கடவுளை அடையும் வழி.      
*அனைவரின் வாழ்வும் ஒன்று தான். உன்னைபோலவே மற்றவர்களையும் நேசி.       
*பணம் வரும், போகும். ஒழுக்கம் வரும், வளரும்.     
*மதிப்பையும், மரியாதையையும் கேட்டுப் பெறக்கூடாது. ஆனால் கடவுளிடம் நாம் வெற்றி பெறுவதற்கான வழியை கேட்டுப் பெறலாம்.     
*கடவுள் அன்பானவர். எனவே அன்பையே வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள்.      
*சுயநலமற்ற வகையில் மனித சமுதாயத்திற்கு ஏதாவது சேவை செய்கிறாயா என்று கடவுள் தனது ஆயிரம் கண்களைக் கொண்டு உன்னை கவனித்து கொண்டிருக்கிறார்.      
*நீ ஒழுக்கசீலனாக இருந்தால், உனது உடல் பிரகாசமாக இருக்கும். சமூக சேவையும், கடவுள் வழிபாடும் உன் உடல் அழகிற்கு பாதுகாப்பாக இருக்கும்.      
*இதுவரை செய்திராத, இனியும் செய்ய முடியாத ஒரு பொருளே மனிதன்! மனிதப்பிறவியே மிக உயர்ந்த பிறவி.      
*அமைதியான மனமுடையவர், சிறந்த உடல் நலத்துடன் விளங்குவார். சிறந்த உடல் நலம் உடையவருக்கு அமைதியான உள்ளம் இருக்கும்.      
*பிறருக்கு கொடுப்பதாலும், மன்னிக்கும் குணத்தாலும் அன்பு நிலைத்திருக்கும். பிறரிடமிருந்து பெறுவதாலும், நன்றி மறக்கும்
குணத்தாலும் சுயநலமே எஞ்சியிருக்கும்.      
*அன்பு சுயநலமில்லாதது. சுயநலத்திற்கு அன்பென்ற வார்த்தைக்கு பொருளே புரியாது.
*எல்லா செயல்களுமே கடவுளால் தான் நிகழ்கின்றன. அவரே உணர வைக்கிறார், உதவுகிறார், நிர்வகிக்கிறார், மகிழ்ச்சியடைய செய்கிறார், மன்னிக்கிறார்,  விதைக்கிறார், அறுக்கிறார்.      
*மனதில் அமைதி புகுந்து விட்டால், அதை அசைக்க யாராலும் முடியாது. அமைதிக்கு மட்டுமே இத்தகைய தனித்தன்மை உண்டு.      
*ஆண்டவனின் கருணை ஆயுள் காப்பீட்டை போன்றது. அது தகுந்த சமயத்தில் உனக்கு அளவற்ற உதவியை செய்யும்.      
*வாழ்க்கை தரம் முக்கியமல்ல. எப்படி வாழ்கிறாய் என்பதே முக்கியம்.      
*மற்றவர்கள் பாராட்ட வேண்டுமே என்பதற்காக உனது சேவை அமைந்து விடக்கூடாது. அது உன் உள்ளத்திற்குள் இருந்து அன்பைச் சுமந்து வரவேண்டும்.      
*கடவுள் உனக்குள் இருக்கிறார், உனது ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும், நினைப்பிலும் இருக்கிறார். நல்லதை பேசி, நல்லதை செய்து, நல்லதை நினைத்து அவரது அன்பிற்கு உன்னை தகுதியானவன் ஆக்கி கொள்.      
*ஒரு மாணவன் கெட்டவனாக இருந்தால், அவன் மட்டுமே பாதிப்பான். ஆனால், ஒரு ஆசிரியர் கெட்டவராக இருந்தால்,
நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாழாகி விடும்.      
*உனது உடலைப் பலப்படுத்து, மனதை சீர்திருத்து. வாழ்வை ஒழுங்குபடுத்து. அப்போது உனது நாடும், வீடும் பலமுள்ளதாகவும், செழிப்புள்ளதாகவும் மாறிவிடும்.      
*உனக்கு மற்றவர்கள் செய்த தீமையை மறந்து விடு. அதுபோல், நீ மற்றவர்களுக்கு செய்த நன்மையையும் மறந்து விடு.
*பணம், நேரம், உணவு மற்றும் ஆற்றலை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள். இதுவே நல்வாழ்க்கைக்கான முதல்படி ஆகும்
* உணவு உண்ண அமரும் போது எளிமையையும், ஆற்றலின்மையையும் உணர்வோம். உண்டு எழும்போது, வலிமையையும், ஆற்றலையும் உணர்வோம்.
*கடவுள் உங்களுக்கு இடம், பொருள், திறமை, வாய்ப்பு, அதிர்ஷ்டம் என அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரே உங்களுக்கு உற்ற தோழனாகவும் இருக்கிறார்
*ஒருமுறை மனப்பூர்வமாக இறைவனிடம் சரணடைந்து விட்டால் போதும். அதன்பின் நம்மை பாதுகாக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar