கோபம்... மனிதனுக்கு வரக்கூடாத விஷயம். ஆனால், அது பல சமயங்களில் தன்னையும் மீறி வந்து விடுகிறது. இவ்வாறு கோபம் வரும் வேளையில் என்ன செய்வது? இதற்கு வழி சொல்கிறார் நபிகள் நாயகம். கோபம் ஷைத்தானால் வரவழைக்கப்படுகிறது. ஷைத்தான் நெருப்பை போன்றவன். நெருப்பு ஓரிடத்தில் பற்றி கொண்டால் தண்ணீர் ஊற்றி அணைக்கிறோம். கோபத்துக்கும் சிறந்த மருந்து தண்ணீர் தான். இதனால் தான் கோபம் வந்தால் ஒளு செய்து கொள்ளுங்கள் என்கிறார். தொழுகைக்கு செல்லும் முன் முஸ்லிம்கள் ஒளு செய்வர். அதாவது தண்ணீரால் பாதங்களையும், கைகளையும் கழுவிக் கொண்டால் கூட கோபம் தீரும்.