ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்களகிரி, இங்கு மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்ம மூர்த்தியாக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திய வண்ணம் எழுந்தருளியுள்ளார். இவர் ஓடிசா மாநிலம் பூரி திருத்தலத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் சந்தனக் குழம்பில் தோய்த்து உடலைக் குளிர வைத்துக் கொண்டு, மங்களகிரியில் பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தைப் பருகிவிட்டு, திருப்பதியில் வேங்கடேசப் பெருமாளாக ஆட்சி செய்துகொண்டு, ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதராக சயனித்து ஜகத் கல்யாண மூர்த்தியாய் விளங்குவதாக விஷ்ணு புராணம் சிறப்பித்துக் கூறுகிறது.