பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதித்த நம்பெருமாள், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடுத்தனுப்பிய வஸ்திரங்களையும், கிளி மாலையையும் அணிந்து, தேரில் எழுந்தருளினார். காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியபோது, ஏராளமான பக்தர்கள்,
ரெங்கா ரெங்கா கோஷத்துடன், வடம் பிடித்தனர். நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், 9:15 மணிக்கு நிலைக்கு வந்தது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும்
வெளிநாடுகளில் இருந்து வந்த பக்தர்கள், நம்பெருமாளை தரிசித்தனர். தேர் திருவிழா நிறைவு நாளான, 27ம் தேதி, நம்பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா வருவார்.