Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா பைரவர் ருத்ர கோவிலில் ... அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்! அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
02:04

மயிலாடுதுறை:  நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பல்லாயிரக்ககணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமர சுவா மியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 2வது செவ்வாய் கி ழமை சிறப்புவழிபாடு நடத்துவதற்காக, சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுகல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம். தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான குடும்பத்தினருக்கு தையல்நாயகி அம்மன் குலதெய்வமாகும். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபயனமாக புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை வைத்தீஸ்வரன் கோயில் வந்து சேர்கின்ற னர். குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள்  சீர்வரிசையுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆண்டும் பாத யாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் ஊர் எல்லையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அ வ ர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டுவந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கை யாக செலுத்தி வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டுக்காக கொண்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar