Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் சித்திரை திருவிழா: ... ஆய்வு!தமிழக கோவில்களில் ஆய்வு வருகிறது யுனெஸ்கோ குழு ஆய்வு!தமிழக கோவில்களில் ஆய்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் ஸ்ரீமன் பக்த சூர்தாஸர் ஜெயந்தி திருவிழா
எழுத்தின் அளவு:
மதுரையில் ஸ்ரீமன் பக்த சூர்தாஸர் ஜெயந்தி திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
10:04

மதுரையில்: சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் அவதரித்தவர் கிருஷ்ண பக்தர் சூர்தாஸர். பிறவியிலேயே பார்வையற்றவர் என்பதால் சொந்த குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டு நிராதரவானவர். கொடுமைகளுக்காளான அவர் வீட்டை விட்டு ஆறு வயதிலேயே வெளியேறினார். யமுனை நதிக்கரையில் அலைந்து திரிந்து கிருஷ்ணனையே தஞ்சம் புகுந்து, அவரின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானார். பிருந்தாவனில் பிரபல இசை மேதை வல்லபாச்சார்யாவின் சீடராகி, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாடல்களை இயற்றியுள்ளார். அவைகள் சூர்சாகர் என பெயர் பெற்றன. ஆனால், இப்போது அவற்றுள் 8000 பாடல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன என்பது துரதிருஷ்டவசமான உண்மை. அவரின் தீவிர பக்தியை மெச்சி, கிருஷ்ணரே அவருக்கு நேரில் காட்சி தந்ததுடன் பார்வையும் தந்தார். என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது, உன்னை தரிசனம் செய்ததே போதும், உன்னைப் பார்த்த கண்களால் பிறிதொன்றையும் பார்க்க விரும்பேன், ஆகவே எனது பார்வையை மீண்டும் எடுத்து விடு என்றார். என்னே பக்தி! அந்த ஒப்பற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸரின் ஜெயந்தி 30.4.2017 அன்று வருகிறது. அதையொட்டி கண்பார்வையற்ற, பிரபல இசைக்கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்த உள்ளார்கள். சூர்தாஸருக்கு செலுத்தப்படும் இந்த இசையஞ்சலியில்  குடும்பத்துடன் கலந்து கொண்டு கிருஷ்ணரின் அன்புக்கு பாத்திரமாக அழைக்கப்படுகிறார்கள்.

இடம்: அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் கல்யாண மண்டபம், மதுரை

நாள்: ஞாயிறு 30.4.2017.  நேரம்: மாலை 4.15 மணி முதல் 8.15 மணி வரை

தலைமை: ஜி. மருதுபாண்டி
முன்னிலை: பா. இளங்கோவன்
வரவேற்புரை: எம். உலகசான்றோன்
வாழ்த்துரை: குருவுதாஸன் எஸ். தர்மராஜ் சிவம்
வாழ்த்துரை: டாக்டர். எஸ். சுப்புலெக்ஷ்மி
நன்றியுரை: எ. பாலசரவணன்

* மாலை 4.15 மணி முதல் 6.00 மணி வரை - மதுரையிலுள்ள பிரபல பார்வையற்றோர் இசைக்குழு சோனா சங்கீத் வழங்கும் பக்திப்பாடல்கள்.
* 6.15 மணி முதல் 8.15 மணி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சூர்தாஸருக்கு இசையஞ்சலி செலுத்த வரும் கலைஞர்கள்

* கே. தியாகராஜன், மிருதங்கம்,
* ஸ்ரீ கே. அருள்தாஸ், மிருதங்கம், ,
*ஸ்ரீமதி மஹேஸ்வரி வெங்கட்ராமன், வீணை,
*ஸ்ரீ ஜி. கார்த்தி, வயலின்,
*ஸ்ரீ எம். மணிகண்டன், மிருதங்கம்,
*ஸ்ரீ எ. மகேஷ்குமார், கடம்,
*ஸ்ரீ கே. மணிகண்டன், புல்லாங்குழல்,
*ஸ்ரீ எம். ஈஸ்வரன், வயலின்,
*ஸ்ரீ வி. கமல்ராஜ் வாய்பாட்டு,
*ஸ்ரீ எஸ். கோகிலன் வாய்பாட்டு,
*ஸ்ரீ எஸ். முருகன் வாய்பாட்டு,

தொடர்புக்கு:  83443 72811,  99429 98112

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar