பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
01:04
மீஞ்சூர் : மீஞ்சூர், வரதாஜ பெருமாள் கோவில் குளம் நீரின்றி வறண்டு கிடப்பதுடன், காய்ந்து போன ஆகாயத்தாமரை செடிகளாலும், குடியிருப்புகளின் கழிவுநீராலும் பொலிவிழந்து
கிடக்கிறது.வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவிலின் குளம், கோவிலின் பின்பகுதியில் உள்ளது. இந்த குளம் உரிய பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கிடக்கிறது. குளத்தினை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், குளத்தில் நேரிடையாக
விடப்படுகிறது.
குளத்தின் கரைகளில் குடியிருப்புகளின் குளியல் அறைகள் கட்டப்பட்டு அதன் கழிவுநீரும் குளத்தில் விடப்படுகிறது.மேலும், குடியிருப்புகளின் குப்பை கிடங்காகவும் மாறி, குளத்தின்
புனிதத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. வற்றாத குளமாக இருந்த குளம், தற்போது, நீரின்றி வறண்டு கிடப்பதுடன், அதிலிருந்த ஆகாய தாமரை செடிகள் காய்ந்து கிடக்கின்றன.
குடியிருப்புகளின் கழிவுநீர், குப்பை, காய்ந்த ஆகாயத்தாமரை செடிகள் என. குளம் பொலிவிழந்து கிடக்கிறது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கண்ட வரதராஜ
பெருமாள் கோவில் குளத்தில் குப்பை, கழிவுகளை அகற்றி, சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.