பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
01:04
ஆர்.கே.பேட்டை : வங்கனூர், சங்கர மடத்தில், 91ம் ஆண்டு ஜெயந்தி விழா, நேற்று துவங்கியது. ஐந்து நாட்கள் பஜனையுடன், வரும் ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவு பெறுகிறது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர், பஜார் வீதியில் உள்ளது சங்கர மடம்.ஆண்டுதோறும் சித்திரையில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று, காலை, 10:00 மணிக்கு, பஜனை மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வரும், 30ம் தேதி வரை நடைபெறும் விழாவில், வங்கனூர் பஜனை குழுவினரின், சிறப்பு வழிபாடு நடக்கிறது.தினசரி, உற்சவர் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.