திருக்கனூர் வக்ரகாளியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2017 01:05
திருக்கனூர் : திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.திருக்கனூர் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவுர்ணமி, அமாவாசை அன்று ஜோதி தரிசனம் நடந்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் வளாகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடந்தது. யாகத்திற்கு, பரமேஸ்வரன் குருக்கள் தலைமை தாங்கினார். யாகத்தில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.